இலவச மொழிபெயர்ப்பு சேவை

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறுபவர்களுக்கு இலவச மொழிபெயர்ப்புச் சேவை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டில் பங்கேற்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்க சேவைகள் மற்றும் திட்டங்களை அணுகுவதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. புதிய புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவச ஆவண மொழிபெயர்ப்புகளை வழங்குவது இந்தச் செயல்முறையை எளிதாக்குகிறது.

இலவச மொழிபெயர்ப்பு சேவை

இலவச மொழிபெயர்ப்புச் சேவை பற்றி

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறுபவர்களுக்கு இலவச மொழிபெயர்ப்புச் சேவை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டில் பங்கேற்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்க சேவைகள் மற்றும் திட்டங்களை அணுகுவதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. புதிய புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவச ஆவண மொழிபெயர்ப்புகளை வழங்குவது இந்தச் செயல்முறையை எளிதாக்குகிறது.

உள்நாட்டு விவகாரத் துறை சார்பாக TIS National இலவச மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குகிறது. ஜூலை 1, 2025 க்கு முன்பு, இலவச மொழிபெயர்ப்புச் சேவை தி மைக்ரேஷன் டிரான்ஸ்லேட்டர்களால் வழங்கப்பட்டது

விசாத் தேவைகள்

சில நிரந்தர குடியிருப்பாளர் வகை விசாக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக விசாக்களைக் கொண்ட புதிய வருகையாளர்கள் 10 தனிப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க இலவச மொழிபெயர்ப்பு சேவையைப் பயன்படுத்தலாம். தகுதியுள்ள விசா துணைப்பிரிவுகளை வைத்திருப்பவர்கள் பொதுவாகச் சேவையை அணுக அனுமதிக்கப்படுவார்கள். தகுதியுள்ள விசா துணைப்பிரிவுகளின் பட்டியல் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்க.

இலவச மொழிபெயர்ப்புச் சேவைக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதைச் சரிபார்க்க,தகுதிச் சரிபார்ப்பைப்பயன்படுத்தலாம்.

உங்கள் விசா துணைப்பிரிவு தகுதி பெற்றிருந்தபோது இலவச மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் முன்பு அணுகியிருந்தால், ஆனால் அது இனி பட்டியலிடப்படவில்லை என்றால், கூடுதல் ஆவண மொழிபெயர்ப்புகளுக்கு நீங்கள் தகுதி பெறமாட்டீர்கள்.

நீங்கள் விண்ணப்பிக்கும் முன்

இலவச மொழிபெயர்ப்பு சேவைக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்தப் பக்கம் விளக்குகிறது.

விண்ணப்பதாரர்களுக்கான முக்கியமான தகவல்கள்

  • இலவச மொழிபெயர்ப்பு சேவைச் செயலி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உங்களுக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  • உங்கள் சார்பாக வேறு யாராவது விண்ணப்பிக்கலாம்.

தயாராகி வருகிறது

நீங்கள் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்த விசா துணைப்பிரிவு தகுதி சரிபார்ப்பைப் பயன்படுத்தவும்.

ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க, உங்களுக்கு இது தேவைப்படும்:

  • ஆஸ்திரேலிய தொலைபேசி எண் மற்றும் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி.
  • உங்கள் கடவுச்சீட்டு அல்லது இம்மிக்கார்டு எண்
  • நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் தனிப்பட்ட ஆவணங்கள்.

அடுத்து என்ன நடக்கும்

உங்கள் தனிப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க நீங்கள் செய்ய வேண்டியது:

  • ஒரு இலவச மொழிபெயர்ப்புச் சேவை கணக்கை உருவாக்குங்கள்.
  • தனிப்பட்ட ஆவணங்களை இணையவழிப் போர்ட்டலில் சமர்ப்பிக்கவும் - ஒவ்வொரு ஆவணமும் செல்லுபடியாகும் தன்மைக்குச் சரிபார்க்கப்படும்.
  • உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்ட உறுதிப்படுத்தலைப் பெறுங்கள்.
  • உங்கள் மொழிபெயர்ப்பு முடிந்தது என்ற அறிவிப்புக்காகக் காத்திருங்கள். 

மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உங்கள் கணக்கிலிருந்து பதிவிறக்கவும்.

ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கும் முன், கணக்கு வைத்திருப்பவர் இலவச மொழிபெயர்ப்பு சேவைப் பயனர் ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படுவார்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆங்கிலம், அரபு, ஃபார்ஸி மற்றும் எளிமையான சீன மொழிகளில் உள்ளன.

முக்கியமான நினைவூட்டல்கள்

உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றுதல்

உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது புகைப்படங்கள் அல்லது வண்ணக் கோப்புகளைப் பதிவேற்றவும். சான்றளிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் கருப்பு வெள்ளை பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

உங்கள் அசல் கோப்புகளின் நகல்களை நீங்கள் வழங்க வேண்டும். மொழிபெயர்ப்பதற்கு விண்ணப்பதாரர்கள் உண்மையான ஆவணங்களை வழங்க வேண்டும்.

வேறொருவரின் சார்பாக விண்ணப்பித்தல்

வேறொருவரின் சார்பாக விண்ணப்பிக்க உங்கள் இலவச மொழிபெயர்ப்பு சேவை கணக்கைப் பயன்படுத்தலாம். கணக்கு வைத்திருப்பவர் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்களையும் விசா விவரங்களையும் வழங்க வேண்டும். ஆவண மொழிபெயர்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு தனிப்பட்ட ஆவணமும் விண்ணப்பதாரரின் பெயருடன் செல்லுபடியாகும் தன்மையுடன் சரிபார்க்கப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் அவரவர் விண்ணப்பம் தேவை.

எடுத்துக்காட்டு 1: உங்கள் குழந்தைகளின் தடுப்பூசிப் பதிவுகளை மொழிபெயர்க்க விரும்புகிறீர்கள். உங்கள் கணக்கில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி விண்ணப்பத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 ஆவணங்கள் இருந்தால், இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து அவர்களிடம் 9 ஆவணங்கள் மீதமுள்ளதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு 2: உங்கள் மற்றும் உங்கள் கணவன் (அ) மனைவியின் ஓட்டுநர் உரிமங்களை மொழிபெயர்க்க விரும்புகிறீர்கள். உங்கள் கணக்கில் 2 விண்ணப்பங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும்: ஒன்று கணக்கு வைத்திருப்பவராக உங்களுக்காகவும், மற்றொன்று இரண்டாவது விண்ணப்பதாரராக உங்கள் கணவன் (அ) மனைவிக்காகவும் ஆனவை. இது உங்கள் 10 ஆவண மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகவும், உங்கள் துணைவருக்கு இன்னொன்றுமாகவும் கணக்கிடப்படும்.

இலவச மொழிபெயர்ப்பு சேவை பற்றி எங்களுடன் பேச உங்களுக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்பட்டால், எங்கள் இயக்குபவர்களில் ஒருவருடன் பேச 131 450 என்ற எண்ணில் TIS ஐ அழைக்கவும்.

நீங்கள் ஆங்கிலம் பேசக்கூடியவராகவும் உதவி தேவைப்படுபவராகவும் இருந்தால், தயவுசெய்து ஒரு தொடர்பு படிவத்தை சமர்ப்பிக்கவும் அல்லது 1300 847 387 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.

உங்கள் இலவச மொழிபெயர்ப்பு சேவை கணக்கை உருவாக்கவும் .

விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்க இப்போதே உங்கள் இலவச மொழிபெயர்ப்பு சேவை கணக்கை உருவாக்கவும் .