TIS National பயன்படுத்துவதில் உதவி

பல்வேறு TIS National சேவைகள் உள்ளன. குறைவான ஆங்கிலமொழிப் புலமையுள்ள யார் வேண்டுமானாலும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்வதற்கு உரைபெயர்ப்பாளருக்கான கோரிக்கையினைச் செய்யலாம்.

TIS National பயன்படுத்துவதில் உதவி

TIS National மூலம் நான் யாரைத் தொடர்பு கொள்ளலாம்?

TIS National ஆஸ்திரேலியா முழுவதும் பரந்த அளவிலான முகமைகள் மற்றும் வணிகங்களுக்கு மொழிபெயர்த்துரைப்புச் சேவைகளை வழங்குகிறது. நீங்கள் TIS National ஐ அழைத்து எங்கள் பதிவுசெய்யப்பட்ட  முகமை வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு கேட்கலாம்.

எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர்: 

  • மாநில மற்றும் மத்திய அரசு துறைகள் - உள்நாட்டு அலுவல்கள் துறை உட்பட
  • பயன்பாட்டு நிறுவனங்கள்
  • தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
  • அவசர சேவைகள்
  • சட்ட சேவைகள்
  • குடியமர்வு மற்றும் சமூக சேவை வழங்குநர்கள்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகமை அல்லது வணிகம் 131 450 அல்லாதஒரு மொழிபெயர்த்துரைப்புச் சேவை தொலைபேசி எண்ணை வழங்கினால், TIS National ஐத் தொடர்புகொள்வதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கவும். அவர்கள் மாற்று மொழிபெயர்த்துரைப்புச் சேவை வழங்குநரைப் பயன்படுத்தினால், TIS National உங்கள் அழைப்பை இணைக்க முடியாமல் போகலாம்.

இலவச மொழிபெயர்த்துரைப்புச் சேவை

இலவச மொழிபெயர்த்துரைப்புச் சேவை (FIS) என்பது TIS National நிறுவனத்தால் வழங்கப்படும் ஆஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் கூடிய சேவையாகும். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் முக்கிய சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதற்காக, தகுதியுள்ள முகமைக் குழுக்களுக்கு FIS கிடைக்கிறது.

FIS, தொழில்முறை மொழிபெயர்த்துரைப்பாளர்களால் வழங்கப்படும் இலவச மற்றும் இரகசிய சேவையை வழங்குகிறது. இது துல்லியமான தகவல் தொடர்புக்குத் துணைபுரிகிறது, குறிப்பாக மருத்துவ சந்திப்புகள் போன்ற முக்கியமான சூழ்நிலைகளில் இது முக்கியமானதாக அமைகிறது.

FIS பின்வரும் சேவைகளுக்குக் கிடைக்கிறது:

  • தனியார் மருத்துவ நிபுணர்கள் (பொது மருத்துவ நிபுணர்கள், செவிலிய நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள்)
  • மருந்தகங்கள்
  • 'ரியல் எஸ்டேட்' முகவர்கள்
  • உள்ளூர் மன்றங்கள்
  • தகுதிபெற்ற அரசு சாரா நிறுவனங்கள்
  • தொழிற்சங்கங்கள்
  • தகுதியான கூட்டு சுகாதார வல்லுநர்கள்
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நீங்கள் இந்த சேவைகளில் ஒன்றிற்கு வருகை தந்தால், ஊழியர்களிடம் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரைக் கோருங்கள். அவர்கள் இதை உங்களுக்காக எந்த செலவும் இல்லாமல் ஏற்பாடு செய்ய முடியும்.

நீங்கள் தொலைபேசி ஊடாக அழைக்க வேண்டியிருந்தால், இலவச மொழிபெயர்த்துரைப்பாளர் சேவைகளுக்கான தொலைபேசி ஊடான மொழிபெயர்த்துரைப்பாளருடன் TIS National உங்களை இணைக்கும்.

வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சூழ்நிலைகளுக்கு என்ன ஆதரவை அணுகலாம்?

குடும்பம், வீட்டு மற்றும் பாலியல் வன்முறை பற்றிய தகவல்கள் இப்போது MyAus செயலி மூலம் கிடைக்கின்றன. MyAus செயலி என்பது ஆஸ்திரேலியாவில் குடியேறி வசிக்கும் மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஒரு இலவச, பன்மொழிக் கருவியாகும். 
நீங்கள்
MyAus செயலி வலைத்தளத்தில் மேலும் அறியலாம்.

TIS National ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரைப் பயன்படுத்தி பல்வேறு குடும்ப சேவைகளுடன் உங்களை இணைக்க முடியும்.